இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’மாநில முதலமைச்சர் என்கிற முறையில் மோடியின் பதவி ஏற்பு விழாவில் மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டேன்.
இது பாஜகவின் பிரிவு மனப்பான்மையைக் காட்டுகிறது: நாராயணசாமி - puducherry cm
சென்னை: மோடி பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலினை அழைக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையை காட்டுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
![இது பாஜகவின் பிரிவு மனப்பான்மையைக் காட்டுகிறது: நாராயணசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3430856-thumbnail-3x2-narayanasamy.jpg)
நாராயணசாமி
ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்காதது பாஜகவின் பிரிவு மனப்பான்மையைக் காட்டுகிறது. அரசியலில் நாகரிகம் கருதி அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஸ்டாலினை அழைக்காதது பாஜகவின் பாரபட்ச மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது’ என்றார். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாதது குறித்து பதில் அளித்த அவர், இது பிரதமரின் முடிவு என்றும் அது குறித்து தன்னால் கருத்துக் கூற முடியாது எனவும் தெரிவித்தார்
நாராயணசாமி பேட்டி
.