தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலிடெக்னிக் முடித்து பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பி.இ., படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்! - பாலிடெக்னிக் கல்லூரி

பாலிடெக்னிக் முடித்து பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பி.இ., படிப்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் முடித்து பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பிஇ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம்
பாலிடெக்னிக் முடித்து பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பிஇ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம்

By

Published : Jul 3, 2022, 7:35 PM IST

சென்னை:இது குறித்து தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டிற்குத் தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்கூர், கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி ஆகிய அரசினர் பொறியியற் கல்லூரிகளிலும், காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரி ஆகியவற்றில் சேரலாம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற ஆன்லைன் மூலம் ஜூலை 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் மூலமாக செலுத்தலாம்.

இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் மூலமாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கல்வியாண்டில் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் மூலமாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தின் மூலமாகவும், 0422-2590080, கைப்பேசி எண். 9486977757 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் சிலம்பம் போட்டி: 800 மாணவர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details