தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - விரைந்து முடிக்க காவல் துறை துணை நிற்கும் - pollachi jeyaraman

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க, அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஜக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

By

Published : Aug 3, 2021, 6:10 AM IST

சென்னை:பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர். இதுதொடர்பாக ஒன்றிய புலனாய்வு பிரிவு (சிபிஐ) விசாரித்துவருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம் ஆகியோர் சி.பி.ஐ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது சிறையில் இருக்கும் அருளானந்தம், பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளராக இருந்தவர். இச்சூழலில், அருளானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை கீழ் நீதிமன்றம் கேட்டுவருவதாகவும் தெரிவித்தார். ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அப்போது ஆஜராகியிருந்த தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொள்ளாச்சி பாலியல் வழக்கு விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழ்நாடு காவல் துறை தயாராக இருப்பதாகவும், குறிப்பாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் ஒரு அலுவலரை நியமித்து உதவ தயார் என்றும் உறுதியளித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, பிணை மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details