சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா! - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா
11:33 September 27
சென்னை: சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நாளை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இச்சூழலில், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் நோய் தொற்று உறுதியானதை தொடர்ந்து, சென்னை போரூரிலுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்பொழுது நலமாக உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் பாதுகாப்புக்காக உள்ள காவலர்கள், உதவியாளருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.