சென்னை:தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நலவாழ்வு மைய கூட்டரங்கில் மாநில அளவிலான தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக அரசுக்கு ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
இதனை மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் கரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவை பெருமளவில் தேவைப்பட்டது.
நீட் - சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை
இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கைவிடுத்திருந்தார். அதன்படி பல்வேறு அமைப்புகள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிவருகின்றனர். இன்றும் பூமி என்கிற தன்னார்வ அமைப்பு 1000 செறிவூட்டிகளை வழங்கி உள்ளது" என்றார்.
மேலும் சென்னையில் டெங்கு பாதித்தவர்கள் நலமுடன் உள்ளதாகவும், டெங்குவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.
நாளை மதியம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க ஒரு சில நிறுவனங்கள் டெண்டர் கோர முன்வந்து இருப்பதைப் பற்றி விவாதிக்க உள்ளதாகக் கூறிய மா. சுப்பிரமணியன்,
- தடுப்பூசியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்,
- ஹெச்.எல்.எல். தடுப்பூசி மையத்தைத் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,
- எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திறப்பு & மாணவர் சேர்க்கை,
- தமிழ்நாட்டில் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை,
- கரோனா & கறுப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகள்