சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் மாநில ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், அனைத்து கட்சிகளும் ஊடகங்கள், பத்திரிக்கைகள், வானொலிகள் மூலாக தேர்தல் பரப்புரை விளம்பரங்களை செய்யக்கூடாது. உரிய அனுமதி பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால், திமுக மற்றும் பாஜக கட்சிகள் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் செய்துள்ளன. எனவே விதிகளுக்கு எதிராக செயல்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை மாநகராட்சி மேயர், துணை மேயர் முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று(மார்ச். 2) விசாரணைக்கு வந்தது.