கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு கட்டியம் கூறும்விதமாக தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றினால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.