சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள துணை ஆணையாளர் அலுவலகத்தில், திருநங்கைகளுக்கான சுய தொழில் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு துணை ஆணையாளர் தலைமை வகித்தார். இதில் "BORN TO WIN" என்ற அமைப்பின் கௌரவத் தலைவர் திருநங்கை அருணா, துணை இயக்குநர் திருநங்கை கிரேஸ் பானு, ஒருங்கிணைப்பாளர் திருநங்கை சுபிக்ஷா எனப் பலர் கலந்து கொண்டனர்.
திருநங்கைகளுக்கு உதவும் காவல்துறையினர் - cops help transgenders
சென்னை: துணை ஆணையர் தலைமையில் திருநங்கைகளுக்கான சுய தொழில் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுயதொழில் தொடங்குவதற்கான பணத்தை துணை ஆணையாளர் திருநங்கைகளுக்கு வழங்கினார்.
சென்னை: துணை ஆணையர் தலைமையில் திருநங்கைகளுக்கான சுய தொழில் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றத்து.இதில் சுயத்தொழில் துவங்குவதற்கான பணத்தை துணை ஆணையாளர் திருநங்கைகளுக்கு வழங்கினார்.
"BORN TO WIN" என்ற அமைப்பால் நடத்தப்படும் தையல் பயிற்சி, DTT சென்டர், அழகுக்கலை பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.10,000; மூத்த திருநங்கை வேல்விழிக்கு சுய தொழில் தொடங்க ரூபாய் 10,000 ஆகியவற்றை காவல் துறை சார்பாக துணை ஆணையாளர் வழங்கினார். இதற்கு திருநங்கைகள் தமிழ்நாடு காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிக்க:காவல் துறையினர் நடத்திய சாலைப் பாதுகாப்பு பேரணி