தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீட்பு பணிகளுக்காக இரவு முழுவதும் விழித்திருந்த காவல் துறையினர்: பாராட்டிய பொதுமக்கள்!

சென்னை: நிவர் புயலினால் உண்டாகும் பாதிப்புகளை தடுப்பதற்காக, காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். மீட்பு பணிக்காக இரவு முழுவதும் விழித்திருந்த அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

rescue operations
rescue operations

By

Published : Nov 26, 2020, 2:12 PM IST

நிவர் புயலினால் உண்டாகும் பாதிப்புகளை தடுப்பதற்காக சென்னை காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். புயல் காரணமாக சென்னையில் இரண்டு நாள்களாக கனமழை பெய்தபடி இருந்தது. இதனால் சென்னை முழுவதும் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டன.

அதனை அப்புறப்படுத்தும் பணியில், மாநகராட்சியினருடன் இணைந்து காவல் துறையினரும் களத்தில் இறங்கி, மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் உள்ளிட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

நிவர் களத்தில் காவலர்கள்

சென்னை காவல் துறையினர் பிரத்யேகமாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை ஆரம்பித்து, பொதுமக்கள் அவசர நேரங்களில் அழைப்பதற்காக செல்ஃபோன் எண்ணையும் வழங்கினர்.

நிவர் களத்தில் காவலர்கள்
குறிப்பாக நிவர் புயலானது இன்று அதிகாலை கரையை நடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால், மீட்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் ஆகியோர் அலுவலகத்திலேயே இருந்து, மீட்பு பணிகளை கவனிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
நிவர் களத்தில் காவலர்கள்

அதனடிப்படையில், நேற்று காலையில் பணிக்கு வந்த அனைத்து உயர் அலுவலர்கள், காவலர்கள் இரவு வீடுகளுக்கு செல்லாமல், இன்று அதிகாலைவரை விழித்திருந்து தயார் நிலையில் இருந்தனர். இதனால் பொதுமக்கள் அழைப்பின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நிவர் களத்தில் காவலர்கள்

இதையும் படிங்க: ’புயலால் விழுப்புரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை’: எஸ்.ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details