தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது பாய்ந்த போக்சோ!

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்
மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்

By

Published : Jul 30, 2021, 10:58 AM IST

சென்னை: எம்கேபி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றிவரும் காவலர், தனது இரண்டு மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, அப்பெண்களின் தாய் கடந்த மார்ச் மாதம் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதா, இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

முற்றுகைப் போராட்டம்

இந்நிலையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் (ஜூலை.28) கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இச்சம்பவம் காவல்துறை உயர் அலுவலர்களுக்கு தெரியவர உடனடியாக விசாரணையை தொடங்குமாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதாவுக்கு உத்தரவிட்டனர்.

அதனடிப்படையில் தனது 10, 12 வயதுள்ள இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!'

ABOUT THE AUTHOR

...view details