சென்னை மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் காவலன் எஸ்.ஒ.எஸ். செயலியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது மாணவிகள் மத்தியில் பேசிய அவர், "ராணி மேரி கல்லூரி அருகே டிஜிபி அலுவலகம் இருக்கிறது. உங்களுக்கு பிரச்னை என்றால் முதலில் அங்கு தகவல் சென்றுவிடும்.
காவலன் எஸ்.ஒ.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதிலுள்ள பட்டனை அழுத்துங்கள்; உடனே காவல்துறை உதவும். இந்த செயலி தமிழ்நாடு முதலமைச்சரால் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. இதை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
பாதுகாப்பான உணர்வு இல்லையென்றால் உடனே காவலன் எஸ்.ஒ.எஸ். செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம். இந்தியாவிலேயே பாதுப்பான நகரங்களாக சென்னையும் கோவையும் திகழ்கின்றன. இதுமட்டுமின்றி, அம்மா ரோந்து வாகனமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது, அவர்களிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம்.