கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. நீண்ட நாள் கழித்து நாளை(டிச.7) இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி திறக்க படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை காணொளியை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில், "பல மாதங்கள் கழித்து கல்லூரி திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெயரில் சமூக விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, "ரூட்டு தல" பிரச்சனைகளில் ஈடுபடக்கூடாது. மீறினால் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். கல்லூரிக்கு வரும் போதும், போகும் போதும் பேருந்துகளின் மேற்கூரைகளில் அமர்ந்து பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்த்து பொதுமக்களுக்கு இன்னல் தராத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்