தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓடும் பேருந்தில் அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்கள் - எச்சரித்த காவலர்

சென்னையில் ஓடும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து, அட்டகாசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்

By

Published : Dec 16, 2021, 5:31 PM IST

சென்னை: பெசன்ட் நகரிலிருந்து அயனாவரம் வழித்தடத்தில் செல்லும் 23-C பேருந்து நேற்று மதியம்(டிச.15) நந்தனம் கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அப்பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி "ரூட்டு தலைக்கு ஜே" என்று கோஷமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சில மாணவர்கள் ஜன்னலைப் பிடித்துத் தொங்கி பேருந்தின் மேற்கூரையில் ஏற முற்பட்டனர். இதைக் கண்ட போக்குவரத்து காவலரும், சைதாப்பேட்டை காவலரும் பேருந்து நிறுத்ததில் நின்ற பேருந்தை தடுத்து பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை கீழே இறக்கிக் கண்டித்தனர்.

அட்டகாசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

அட்டகாசம்

ஒரு சில மாணவர்கள் காவலர்களை கண்டு தப்பியோடிய நிலையில், மாணவர்களின் அட்டகாசத்தைக் காவலர்கள் வீடியோ பதிவு செய்தனர். மேலும், பேருந்தினுள் கோஷமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவலர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மாணவர்களின் வீடியோவை கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பி மாணவர்களுக்குத் தகுந்த அறிவுரை வழங்க அறிவுறுத்தவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆளுநர் ரவி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details