சென்னை: நடிகர் கார்த்தி நடித்த ’தோழா’ திரைப்படம் வெளியான போது, தூத்துக்குடி கார்த்தி ரசிகர் மன்ற தலைவரான வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகியோரிடம் தூத்துக்குடி மத்திய காவல் நிலைய தலைமைக்காவலர் திரவிய ரத்தினராஜ், லஞ்சம் கேட்டுள்ளார்.
அவர்கள் லஞ்சம் தர மறுத்ததால் மூவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்றுள்ளனர். காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தலைமைக்காவலர் திரவிய ரத்தினராஜ் ஆகியோர் வெங்கடேஷ் உள்ளிட்ட மூவரையும் ஆபாசமாக திட்டியதுடன், கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக வெங்கடேஷின் சகோதரர் வழக்கறிஞர் கவாஸ்கர், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.