தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓட்டல் ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம்! - சென்னை செய்திகள்

வில்லிவாக்கத்தில் ஓட்டல் ஊழியர் ஒருவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Police suspended f
Police suspended f

By

Published : Nov 28, 2020, 7:35 AM IST

சென்னை: தலைமை செயலக காலனியில் காவலராக பணிபுரிந்தவர் வின்சன்ட்(50). தற்போது இவர் இந்து அமைப்பின் தலைவர் ஒருவருக்கு தனிப் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு ஒன்றிற்கு வின்சன்ட் அடிக்கடி சாப்பிட சென்ற போது, அவருக்கு ஓட்டலில் பணிப்புரிந்த வடமாநிலத்தை சேர்ந்த அன்னபூரணி என்ற பெண் பழக்கமாகி உள்ளார். அப்போது எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் கேட்கும்படி வின்சன்ட் அந்த பெண்ணிடம் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி, சரியாக வேலை செய்யவில்லை என, அன்னபூரணியை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் வின்சன்டிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஹோட்டலுக்குள் வந்த வின்சன்ட் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் வைத்திருந்த கைதுப்பாக்கியயை எடுத்து பணியாளர்களைச் சுட்டு விடுவேன் மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து ஹோட்டல், மேலாளர் சபரி என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் காவலர்கள் உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில், அவர்கள் வின்சன்டை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details