தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் 250 கிலோ குட்கா பறிமுதல்! - police seized 250 kg of pan masala

சென்னை: சேலையூர் அருகே 250 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

250 kilogram of Pan masala seized
250 kilogram of Pan masala seized

By

Published : Dec 13, 2019, 7:46 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள பதுவஞ்சேரி பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தர்மலிங்கம் (46), இருதயராஜ் (45) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களிடமிருந்து இரண்டு கிலோ பான் மசாலாக்களும் குட்காக்களும் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பான் மசாலா, குட்காவை மொத்தமாக வியாபாரம் செய்துவருவதும் வீட்டில் மொத்தமாக பதுக்கிவைத்துள்ளதும் தெரியவந்தது.

சென்னையில் 250 கிலோ குட்கா பறிமுதல்

இதையடுத்து, கண்டிகையிலுள்ள தர்மலிங்கம் வீட்டிலிருந்து 50 கிலோவும் மாம்பாக்கத்திலுள்ள இருதயராஜ் என்பவரது வீட்டிலிருந்து 200 கிலோ பான் மசாலா, குட்கா போதைப்பொருள்களை காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவர்கள் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில கும்பல் சென்னையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details