தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் போலி நகை கொடுத்து மோசடி.. போலீசாரின் மனைவிக்கு வலைவீச்சு - சிசிடிவி

சென்னையில் போலி தங்க நகைகளைக் கொடுத்து, புதிய நகைகள் வாங்கி மோசடி செய்த ஊர்காவல்படை வீரரை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியை தேடி வருகின்றனர்.

போலீசார் வலைவீச்சு
போலீசார் வலைவீச்சு

By

Published : Aug 20, 2022, 6:46 PM IST

Updated : Aug 20, 2022, 11:03 PM IST

சென்னை:மயிலாப்பூர் பஜார் பகுதியில் மகாலட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை ஜெயச்சந்திரன்(61) என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 18ஆம் தேதி இவரது கடைக்கு தனது கணவனுடன் சென்ற பெண்ணொருவர், தன்னை ராணி என்ற பெயரில் அறிமுகம் செய்து தன்னிடம் இருக்கும் பழைய நகைகளுக்கு மாறாக புதிய நகைகள் பெற வேண்டும் என்றுள்ளார். இதனை நம்பிய ஜெயசந்திரன் அவரிடமிருந்த 8.5 சவரன் (68 கிராம்) பழைய நகைகளை பெற்றுக்கொண்டு, மாறாக 6 சவரன் புது நகைகளை அளித்துள்ளார். பழைய நகைக்குரிய தொகை போக மீதம் அளிக்கவேண்டிய தொகையை தான் ஒருவாரத்தில் அளிப்பதாகக் கூறிய அப்பெண் வருவார் என ஆக.18 வரை காத்திருந்த கடையின் உரிமையாளர் சந்தேகமடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் அப்பெண்மணி அளித்த 8.5 சவரன் நகையை பரிசோதித்தபோது அவை போலியானவை என கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

போலீசாரின் மனைவிக்கு வலைவீச்சு

சிசிடிவியில் பதிவாகி இருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணின் மூலம் அவர்களின் வீட்டையடைந்த போலீசார் அவரது கணவரை இன்று (ஆக.20) கைது செய்தனர்.

விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட பெண், குன்றத்தூர் லட்சுமி நகரைச் சேர்ந்த ஊர்காவல் படையில் பணியாற்றும் மோகன்குமார்(46) மனைவி ஈஸ்வரி(36) என தெரிய வந்தது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள போலீசாரின் மனைவி குறித்து மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு அப்பெண்ணை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி ஆலோசனை

Last Updated : Aug 20, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details