சென்னை: ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை, ஜெஜெ தெரு, அம்புஜம்மாள் தெரு அதன் சுற்று வட்டார தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் உடைத்து செல்வதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன.
குறிப்பாக அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான சுமதியின் இரு கார்களை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.