தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாய் குட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமிக்கு வலைவீச்சு! - dog

சென்னை: மாதவரத்தில் போதை ஆசாமி நாய் குட்டிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாய் குட்டிகளுக்கு பாலியல் தொல்லை

By

Published : Mar 16, 2019, 7:12 AM IST

மாதவரம் மாத்தூர் எம்.எம்.டி.ஏ இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த, குடிநீர் வாரிய ஊழியராக உள்ளவர்சகாதேவன். இவரது வீட்டிற்கு அருகே தெருநாய் ஒன்று ஆறு குட்டிகளை ஈன்றது. அவற்றுக்குசோறு வைத்து இளவரசி கவனித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் நீண்ட நேரம் நாய்க்குட்டிகளிடம் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த நாய்க்குட்டிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனை கவனித்த இளவரசி கூச்சலிட்டபடி ஓடிவந்துள்ளார்.

அப்போது போதையில் இருந்த அந்த ஆசாமி உடைய ஒழுங்குபடுத்திக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். அவர்கள் அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது மர்ம ஆசாமி நாய்குட்டிகளிடம் அத்துமீறியது தெரிய வந்தது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் ப்ளூ கிராஸில் புகார் அளித்தனர். மேலும் இதுதொடர்பாக மாதவரம் போலீசார் மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். இப்பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகளவில் உள்ளதால் போதை ஆசாமிகள் அட்டகாசத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்த சமூகத்தில் போதை ஆசாமிகளால் நாய்குட்டிகள் கூட பாதுகாப்பாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details