சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்தது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை நகரில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் சிக்கியவர்களை காவல் மீட்புக் குழுவினர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
வெள்ள பாதித்த இடங்களில் காவல் மீட்பு குழு இதையடுத்து, நேற்று(நவ.28)மடிப்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் சிக்கியவர்களை படகு மூலம் காவல் குழுவினர் மீட்டனர். மேலும், சாய் பாலாஜி நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் படகு மூலம் மீட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ள பாதித்த இடங்களில் காவல் மீட்பு குழு இதையும் படிங்க: Watch Video: இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆவடி மக்கள்!