தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிடிவாரண்டில் உள்ள மீரா மிதுன் தலைமறைவாகினார்... சென்னை போலீசார் நீதிமன்றத்தில் பதில்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாக, சென்னை காவல்துறை, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 29, 2022, 8:03 PM IST

சென்னை:பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத் துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்த தனது கருத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப்புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆக.6ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜர் ஆனார். மீரா மீதுன் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால், இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று (ஆக.29) விசாரணைக்கு வந்தது. அப்போது, சாம் அபிஷேக் மட்டுமே ஆஜர் ஆனார்.

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிடிவாரண்ட்டில் உள்ள மீரா மீதுன் எங்கு உள்ளார் என்பதைத் தேடி வருவதாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் செப்.14 ஆம் தேதி நீதிபதி ஸ்ரீதேவி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'பறையர் கலகத்தை' சுதந்திரப் போராட்டமாக அங்கீகரிக்க வேண்டும்... முதலமைச்சருக்கு விசிக எம்.பி. கடிதம்

ABOUT THE AUTHOR

...view details