சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் சாலையில் ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையம் இயங்கி வருகிறது. இங்குக் கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த சரசு என்ற பெண், குழந்தைப் பேறு சிகிச்சை எடுக்க வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், திடீரென உயிரிழந்தார்.
ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் சோதனை - சென்னை
சென்னை: எழும்பூரில் உள்ள ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையம்
ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் சோதனை
இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்ததினால் தனது தங்கை உயிரிழந்ததாக சரசுவின் சகோதரர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இதனையடுத்து, தற்போது அந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் எழும்பூர் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.