தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு - வாக்குப் பதிவு இயந்திரங்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

மணலி மண்டலம்
மணலி மண்டலம்

By

Published : Feb 9, 2022, 1:49 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையின் 15 மண்டலங்களுக்குள்பட்ட 200 வார்டுகளில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மணலி மண்டல அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் இந்தத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேன்கள் மூலமாக அனுப்பப்படும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

மணலி மண்டலத்திலிருந்து சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு அனுப்பப்படும் இயந்திரங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு பின்னர் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேன்களில் அனுப்பப்படுவதால் மணலி மண்டலத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் 5 இடங்களில் தேர்தல் மற்றும் கரோனா விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு - ககன்தீப் சிங் பேடி

ABOUT THE AUTHOR

...view details