முழு ஊரடங்கு நாளான இன்று (ஏப்.25) வடசென்னை பகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி, புதுவண்ணாரப் பேட்டை ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வரும் பொது மக்களை தடுத்து நிறுத்தி, வெளியே வந்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் தகுந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.
முழு ஊரடங்கு: வடசென்னை பகுதியில் தீவிர வாகன சோதனை! - வாகனங்கள் பறிமுதல்
சென்னை: முழு ஊரடங்கு நாளான இன்று(ஏப்.25) தீவிர வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
roaming
தேவையின்றி சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். மேலும் வாகனங்களில் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.