தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை - காவலரின் கோரிக்கை

மகனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என சென்னையை சேர்ந்த காவலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசிடம் காவலரின் கோரிக்கை
தமிழ்நாடு அரசிடம் காவலரின் கோரிக்கை

By

Published : Feb 22, 2022, 6:54 AM IST

சென்னை: பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தேவேந்திரன். இவர் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த ஆண்டு தனியார் மருத்துவமனையில் ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசிடம் காவலரின் கோரிக்கை

இந்நிலையில், இவரது மகன் கிஷோருக்கும் சிறுநீரக பாதிப்பு அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், தேவேந்திரன் மனைவியின் சிறுநீரகத்தை அவரது மகனுக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவேந்திரனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தேவேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: பேரறிவாளளுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details