தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுவன் வேன் மோதி உயிரிழந்த விவகாரம் - பள்ளி நிர்வாகத்திற்கு காவல் துறை நோட்டீஸ்! - சென்னை செய்திகள்

பள்ளி வளாகத்திற்குள் 7 வயது சிறுவன், பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

காவல்துறை நோட்டீஸ்
காவல்துறை நோட்டீஸ்

By

Published : Apr 1, 2022, 6:59 PM IST

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் தீக்ஷித், அந்தப் பள்ளி வளாகத்திலேயே பள்ளி வாகனம் மோதி கடந்த 28ஆம் தேதி உயிரிழந்தார். இது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலெட்சுமி, வாகன ஓட்டுநர் பூங்காவனம், பணிப்பெண் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகன ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பணிப்பெண் ஞானசக்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிக்கு நோட்டீஸ்:இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக, வளசரவாக்கம் போலீசார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் பள்ளியின் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை என்னென்ன என்பது குறித்து 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

வளசரவாக்கம் போலீசாரால் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு இரண்டு நாட்களுக்குள் பள்ளியின் தாளாளர் அல்லது பள்ளியின் முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்து விபத்தில் இறந்த மாணவரின் தாயாருக்கு அமைச்சர் ஆறுதல்

ABOUT THE AUTHOR

...view details