தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செங்கல்பட்டில் எரிந்த நிலையில் கிடைத்த ஆண் சடலம் - தீவிரமடையும் விசாரணை - Recy of body of a missing person in Chennai in a burnt condition

சென்னை விஜயராகவபுரத்தை சேர்ந்தவர் ரவி என்பவரை கண்டுபிடித்து தருமாறு உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டில் எரிந்த நிலையில் கிடைத்த ஆண் சடலம் காணமல்போன ரவி என உறுதியாகியுள்ளது. இதனையடுத்து போலீசார் வீசாரணையத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

விசாரணை
விசாரணை

By

Published : Jun 10, 2022, 12:56 PM IST

சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர் ரவி(26). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1ஆம் தேதி ரவி தனியாக வீட்டில் இருந்தபோது 3 பேர் கோயம்பேடு காவல்நிலையத்தில் இருந்து வருவதாகக் கூறி ரவியை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

போலி போலீசார்:இதனையடுத்து ரவியின் மனைவி ஐஸ்வர்யா, இந்த தகவலறிந்து கோயம்பேடு காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது, அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என காவல்துறையினர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து ஐஸ்வர்யா, தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த 4ஆம் தேதி கே.கே.நகர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

குடும்ப பிரச்சனை:அதில் 'தனது வீட்டின் அருகே செம்பியம் காவல்நிலைய காவலரான செந்தில்குமார் என்பவர் அவரது காதலியுடன் வசித்து வந்தனர். செந்தில்குமாருடன் இணைந்து எனது கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்தார். இந்நிலையில், எங்களது குழந்தை செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால், செந்தில்குமாரின் குடும்பத்தோடு பிரச்சனை ஏற்பட்டது.

போலீசில் புகார்: அப்போது எனது கணவர் ரவியை, கொலை செய்துவிடுவதாக செந்தில்குமார் மிரட்டினார். இந்நிலையில் எனது கணவர் காணாமல்போன அந்த நாளே, செந்தில்குமாரும் குடும்பத்துடன் வீட்டைக் காலி செய்துவிட்டு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது கணவரை செந்தில்குமார் கடத்தி சென்றிருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார், Missing என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது காவலர் செந்தில்குமார், வீட்டில் விசேஷம் எனக்கூறி கடந்த மே 28ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

எரிந்த நிலையில் சடலம்:இதனால், சந்தேகமடைந்த கே.கே.நகர் போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் காணாமல்போன, இவர்கள் இருவரது செல்போன் எண்களும் கடைசியாக ஈக்காட்டுதாங்கல், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் ஸ்விட்ச் ஆப் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே பல நாட்களாகியும் தனது கணவர் கிடைக்காததால் ஐஸ்வர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

விரிவடையும் விசாரணை வளையம்: இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அது ரவியின் உடல என விசாரணையில் உறுதியாகி உள்ளது. மேலும், செந்தில்குமாரின் காதலியைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, தலைமறைவாக உள்ள செந்தில்குமார் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கடன் கேட்டு மிரட்டியதால் தற்கொலை; ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details