கரோனாவிற்கு தற்போது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்பதே ஒரே வழியாக இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி தேவையற்ற காரணங்களைக் கூறி பொதுமக்களில் சிலர் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.
ஊரடங்கு மீறலைத் தடுக்க காவல்துறையினரும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், திருமுல்லைவாயல் அருகே சி.டி.எச் சாலையில் வலம் வந்த நபர்களை, அங்கு தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர்களை வரிசையாக நிற்க வைத்த திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் புருசோத்தமன், இன்றைய செய்தித்தாளை வழங்கி, நாட்டு நடப்புகளை படிக்க வைத்தார்.