சென்னை:பெரும்பாக்கம் அருகே ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்வம் குறித்து பெரும்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தாலப்பாக்கம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அப்துல் கனி (32) என்பவர் மது போதைக்கு அடிமையானதால் அவர் மதுரையிலுள்ள போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஏப்.22ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து சித்தாலப்பாக்கத்தில் உள்ள தங்கையின் வீட்டில் தங்கியிருந்து சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
பெரும்பாக்கம் போலீசார் விசாரணை இந்நிலையில் நேற்றிரவு (செப்.07) படுக்கை அறையிலிருந்து இன்று (செப்.8) வெகு நேரமாக வெளியே வராததால் அவரது தங்கையின் கணவர் நிஷார் அகமது அறைக்குள் சென்றார். அப்போது, அப்துல் கனி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் காவல் துறையினர், அப்துல் கனி உடலை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல்..சென்னையில் இருவர் கைது