தேசியக்கொடியை அவமதித்தது, தமிழ்நாடு முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இப்புகார் தொடர்பாக ஏற்கெனவே கடந்த 24ஆம் தேதியன்று, சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜரான எஸ்.வி.சேகரிடம், சென்னை மாநகர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நான்கு மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன்பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.