தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவ வீரர்கள், காவலர்கள்! - military

சென்னை: தேர்தல் பணிகளுக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் என 5000க்கும் மேற்பட்டோர் ராஜரத்தினம் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

police

By

Published : Apr 16, 2019, 2:22 PM IST

மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் என 6 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பூந்தமல்லி, பெரம்பூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளில் 1,707 வாக்குப்பதிவு மையங்களும், அதில் 7,832 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவ வீரர்கள், காவலர்கள்!

வாக்குச்சாவடிக்கு ஒரு காவலர் வீதம் 7,832 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 62 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் வடசென்னையில் மட்டும் 45 வாக்குச்சாவடிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை பாதுப்பு பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு சேர்த்து சென்னையில் மொத்தமாக 17 ஆயிரம் போலிசார் பாதுகாப்பும், 7 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒய்வுபெற்ற போலீசார் 400 பேர் பணியாற்ற உள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு காவல் ஆய்வாளர் எனவும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உதவி ஆணையர், மற்றும் கூடுதல் துணை ஆணையர் தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் காவலர்கள் பயன்படுத்த உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் ராணுவ வீரர்கள், காவலர்கள்!

இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தேர்தல் பணிகளுக்காக முன்னாள் ராணுவ வீரர்கள் 1000 பேர், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் 1000 பேர் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த 3000 பேர் என தற்போது வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் பிரித்துதரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக உபகரணங்களை கொண்டு செல்வதற்காக எண்ணற்ற வாகனங்கள் மைதானத்தில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் குறித்த விபரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகளை ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details