தமிழ்நாடு

tamil nadu

மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம் - சென்னை காவல் ஆணையர்

By

Published : Aug 3, 2021, 9:41 AM IST

கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காவலர்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

police-commissioner-shankar-jiwal
police-commissioner-shankar-jiwal

தமிழ்நாட்டில் ஒருவாரமாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், "கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அலுவலர்கள், தொற்று பரவும் இடங்களுக்குச் சென்று கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் அவர்கள் காவலர் குடியிருப்புக்கு சென்ற போது ஓய்வு பெற்ற காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டியது. கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காகவே மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதனைக் காவலர்கள் யாரும் அவமானமாகப் பார்க்க வேண்டாம். மேலும் காவலர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் முன்னேற்றம் இல்லை. அதன் காரணமாக நாளை முதல் ஆக. 28ஆம் தேதி வரை மருத்துவ முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. காவலர்கள் அனைவரும் இம்முகாமைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details