வெளி மாவட்டங்களில் இருந்து திருநின்றவூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வந்து தங்கியிருக்கும் கூலித் தொழிலாளர்கள் ஊரடங்கால் வருமானம், உணவின்றி தவித்து வருகின்றனர். 144 தடை அமலில் உள்ளதால் கடும் கெடுபிடி காட்டும் காவல் துறையினர், உணவு வழங்கும் தன்னார்வலர்களையும் காவல் நிலையத்திற்கு வந்து நிவாரணப் பொருட்களை வழங்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
உணவுக்காக காத்திருந்தவர்களை விரட்டியடித்த காவல்துறை! - காவல்துறை
சென்னை: மதிய உணவு வழங்குவதாகக் கூறி ஏழை எளிய மக்களை வெயிலில் நிற்க வைத்து காவல் துறையினர் அவர்களை விரட்டி அடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
charge
இந்நிலையில், மதிய உணவு வழங்கப்படுவதாக தகவலறிந்து இன்று காலையிலேயே காவல் நிலையம் வந்த ஏழை மக்கள், நிற்பதற்குக்கூட இடமின்றி கடும் வெயிலில், லாரிக்கு அடியில் ஒதுங்கியிருந்தனர். நெடுநேரமாக அங்கு காத்திருந்த அவர்களைக் காவல் துறையினர் விரட்டியடித்தனர். பெண்கள், சிறுவர்கள் என்றும் பாராமல் காவல் துறையினர் இப்படி நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கை மீறி சூதாடியவர்கள்: நூதன தண்டனை வழங்கிய காவல்துறை