சென்னை: அயனாவரத்தில் 5 ஆண்டுகளாக தையல் கடை நடத்தி வரும் அழகப்பன் (45) என்பவரின் கடைக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி வந்த 18 வயதுடைய இரு இளம் பெண்கள் அளவு ஜாக்கெட் இல்லாமல், ஆல்டரேஷன் செய்து தருமாறு கூறியதால் அவர்களுக்கு அளவெடுத்து ஜாக்கெட்டை ஆல்டர் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் அவரது கடைக்கு வந்த 20 வயதுடைய இரு இளைஞர்கள் ”பெண் பிள்ளைகளுக்கு எப்படி அளவெடுப்பாய்” எனக்கேட்டு அங்கிருந்த பிளாஸ்க் மூலமாக தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளனர். இதனால் அழகப்பனுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.