சென்னை: திருவல்லிக்கேணி அயோத்தி நகர் குடிசை மாற்றுவாரியத்தில் வசித்துவருபவர் செந்தில். இவர் தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார். செந்தில் நேற்று (டிசம்பர் 08) தனது நண்பரான ஸ்டெல்லின் (31) என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து, மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறகு செந்தில் அங்கேயே உறங்கியதாகக் கூறப்படுகிறது.
குடிபோதையில் இருந்த ஸ்டெல்லின் மட்டும் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று ஸ்டெல்லின் அருகே வந்துநின்றுள்ளது. அப்போது அளவுக்கதிகமான போதையில் இருந்த ஸ்டெல்லின் திடீரென நாயை தூக்கி மாடியிலிருந்து கீழே வீசினார். இதில் நாய் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
நாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அதே குடியிருப்பைச் சேர்ந்த நாயின் உரிமையாளரான பிரவீன் குமார், நாயை வீசிக்கொன்ற நபர் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மெரினா காவல் துறையினர், ஸ்டெல்லினை கைதுசெய்தனர்.
அலட்சியம் காட்டிய காவல் துறை
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய நாயின் உரிமையாளரான பிரவீன் குமார், “எனது 5 வயது மகளுக்காக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து சிப்பி பாறை ரக நாயை வாங்கிக் கொடுத்தேன். டெமி என்ற பெயர் வைத்துச் செல்லமாக கடந்த ஓர் ஆண்டாக நாயை வளர்த்துவந்தோம்.