சென்னை:அரும்பாக்கத்தில் உள்ள பெட் நகைக்கடன் வங்கியில் கடந்த 13ஆம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை போன சம்பவத்தில், அதே வங்கியில் பணியாற்றிய ஊழியர் முருகனே தனது கூட்டாளியுடன் திட்டமிட்டு கொள்ளை இச்சம்பவத்தில் ஈடுபட்டது விசாராணையில் தெரியவந்தது.
இதனையடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளிகளான முருகன், சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன், நகை வியாபாரியான கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீவத்சவா, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டது. மேலும், இவர்கள் பயன்படுத்திய வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.