பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப்.8) முதல் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதற்காக பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் அந்த பந்தலை அகற்றினர்.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கைது! - ஆசிரியர்கள்
சென்னை: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
geo
அதனைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற தங்களை வேண்டுமென்றே காவல்துறையினர் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், திட்டமிட்டபடி தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆர்வத்துடன் கல்லூரிக்கு வரும் முதலாமாண்டு மாணவர்கள்
Last Updated : Feb 8, 2021, 2:29 PM IST