தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹெராயின் எனக்கூறி யூரியாவை விற்க முயன்ற நான்கு பேர் கைது! - ஹெராய்ன் எனக்கூறி யூரியாவை விற்க முயன்ற நான்கு பேர் கைது

ஹெராயின் எனக்கூறி விவசாயத்திற்குப் பயன்படுத்தும் யூரியாவை விற்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹெராய்ன் எனக்கூறி யூரியாவை விற்க முயன்ற நான்கு பேர் கைது
ஹெராய்ன் எனக்கூறி யூரியாவை விற்க முயன்ற நான்கு பேர் கைது

By

Published : Mar 4, 2022, 2:52 PM IST

சென்னை:மாதவரத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின்பேரில், கடந்த 28ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திய போது, சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர்.

அப்போது, போதைப்பொருள்போல் இருந்ததால் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி(27) மற்றும் மதுரையைச் சேர்ந்த முகமது சபி(29) என்பது தெரியவந்தது.

மேலும் ஹெராயின் என்னும் போதைப்பொருளை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜா(40) மற்றும் அருண்குமார்(31) ஆகியோரிடம் இருந்து பெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

வாக்குமூலத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த முத்துராஜா மற்றும் அருண்குமார் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகின.

ஹெராய்ன் எனக்கூறி யூரியாவை விற்க முயன்ற நான்கு பேர் கைது

ஓட்டுநராக உள்ள முத்துராஜா தேவகோட்டையில் தனது நண்பரான மணவாளன் என்பவருடன் சேர்ந்து ஒரு கிலோ யூரியாவை வாங்கி, அதில் சில வேதிப்பொருட்களைச் சேர்த்து அரைத்து ஹெராயின் என்னும் போதைப்பொருள் போல் தயாரித்துள்ளனர்.

இதனையடுத்து தயாரிக்கப்பட்ட 1 கிலோ போதைப்பொருளை முத்துராஜா தனக்குத் தெரிந்த நண்பரான அருண் குமார் என்பவரிடம் கொடுத்து விற்று கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அருண்குமார் அவருக்குத் தெரிந்த நண்பரான தமீம் அன்சாரி மற்றும் முகமது சபி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை

கத்தாரில் உள்ள சையது என்பவர் 15 லட்சம் ரூபாய்க்கு ஹெராயின் என்னும் போதைப்பொருளை வாங்கிக் கொள்வதாக தமிம் மற்றும் முகமது சபியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 28ஆம் தேதி சென்னை மாதவரத்தில் உள்ள துணிக்கடை அருகே போதைப்பொருளை கொண்டு வருமாறும், மண்ணடியைச் சேர்ந்த ஜமால் நிவாஸ் என்பவர், பணத்தைக் கொடுத்துவிட்டு போதைப்பொருளை பெற்றுக் கொள்வார் எனவும் சையது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி போதைப்பொருளை கொடுக்க தமிம் அன்சாரி மற்றும் முகமது சபி ஆகியோர் நின்றிருந்தபோது காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் முத்துராஜா ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு ஹெராயின் போதைப்பொருளை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் இந்தக் கும்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரிஜினல் ஹெராயினை கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யூரியாவை ஹெராயின் போதைப்பொருள் என நம்ப வைத்து மோசடி செய்ய முயன்ற நான்கு பேர் மீதும் மோசடி உட்பட 4 பிரிவுகளின் கீழ் பெரியமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இதேபோல் இந்தக் கும்பல் வேறு யாரிடமாவது போதைப்பொருள் எனக்கூறி, மோசடி செய்துள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நியமனங்களுக்கு இடைக்கால தடை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details