தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேராசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கைது - பேராசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கைது

சென்னை: பிறந்தநாள் அன்று மாமல்லபுரம் அழைத்துச்சென்று பேராசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை செம்மஞ்சேரி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest

By

Published : Sep 23, 2019, 11:15 PM IST

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உதவி பேராசிரியையாக பணியாற்றிவருகிறார். அந்த பெண் சோழிங்கல்லூரில் தங்கியிருக்கிறார். அதே கல்லூரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவேஷ் (23) என்ற இளைஞரும் பகுதி நேரமாக படித்துவருகிறார்.

அம்பத்தூரில் வசித்துவரும் அந்த இளைஞருக்கும், கல்லூரி உதவி பேராசிரியைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விவேஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு சோழிங்கநல்லூர் சென்று அந்த உதவி பேராசிரியை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலை பூஞ்சேரி பகுதி அருகே சென்றபோது ஒரு மறைவான இடத்தில் பைக்கை நிறுத்திய விவேஷ் பேராசிரியையிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர் ஆடையை களைந்து தனது செல்ஃபோனில் படமெடுத்துள்ளார். இதனால் அந்தப் பேராசிரியை கோபப்படவே செல்ஃபோனில் எடுத்த படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, பேராசிரியை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கோயம்பேட்டில் இருந்த விவேஷை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details