தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிபிசிஐடி அலுவலகம் அருகே ஆண் சடலம் - எழும்பூர் சிபிசிஐடி அலுவலகம்

சிபிசிஐடி அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிசிஐடி அலுவலகம் அருகே ஆண் சடலம்
சிபிசிஐடி அலுவலகம் அருகே ஆண் சடலம்

By

Published : Oct 10, 2021, 12:41 PM IST

Updated : Oct 10, 2021, 3:48 PM IST

சென்னை: எழும்பூர் சிபிசிஐடி அலுவலகம் அருகே அமைந்துள்ள பாந்தியன் சாலை அருகே முட்புதர் நிறைந்த பகுதியில் நேற்று(அக்.09) காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அப்பகுதிக்கு அருகில் உள்ள தங்கும் விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு எழும்பூர் காவல் துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் நேரில் வந்து உடலை ஆய்வு செய்த நிலையில், தடயவியல்துறை உதவி இயக்குநர் சோஃபியாவும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டார்.

சிபிசிஐடி அலுவலகம் அருகே ஆண் சடலம்

இதனையடுத்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நிலையில் மீட்கப்பட்ட நபரின் கைப்பையில் மாற்று உடை மற்றும் மதுபான பாட்டில் கண்டெடுக்கப்பட்டது.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் இயற்கை உபாதை கழிக்க மறைவிடம் தேடி வந்த நபர் தவறி அல்லது மயங்கி விழுந்து இறந்திருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இறந்த நபர் யார்? எனவும், இறப்பில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் தொடர்ந்து எழும்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானாவில் கனமழை; சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழப்பு!

Last Updated : Oct 10, 2021, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details