தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இன்னும் விசாரணை நிறைவுபெறவில்லை' - சசிகலா - ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி

விசாரணைக் குழுவிற்கு தான் முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக, கோடநாடு கொலை வழக்கு குறித்து சசிகலா தெரிவித்தார்.

சசிகலா
சசிகலா

By

Published : Apr 21, 2022, 11:04 PM IST

சென்னை:நீலகிரிமாவட்டம், கோடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமாக அமைந்துள்ள எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு, பல்வேறு முக்கியப்பொருட்களை கொள்ளையடித்து சென்றதாகத் தெரிகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் நடைபெற்ற இந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

5 தனிப்படைகள் அமைத்து விசாரணை:மேலும், இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு, சேலத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல, கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டது இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மீண்டும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தூசிதட்டப்பட்டு மறு விசாரணை தொடங்கியது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவிடம் நேரில் விசாரணை:குறிப்பாக, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இன்று (ஏப்.21), சென்னை - தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டிற்கு சென்று ஐஜி சுதாகர் தலைமையில் எஸ்.பி ஆஷித் ராவத், ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி ஆகிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் இரு பெண் காவலர்கள் உள்பட 8 பேர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக, கோடநாடு கொலை,கொள்ளைச்சம்பவம் நடந்தபோது சசிகலா சிறையில் இருந்ததாக தெரிகிறது.

சசிகலாவிடம் விசாரணை
வாக்குமூலம்: கோடநாடு எஸ்டேட்டில் இருந்த நிலப்பத்திரங்கள், பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் என்னென்ன? கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போன பொருட்கள் எவை? எஸ்டேட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த நபர்கள் யார்? உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து சசிகலாவிடம் ஐஜி சுதாகர் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 6 மணி நேரமாக தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த விசாரணையில் சசிகலா அளித்துள்ள பதில்களை வாக்குமூலமாக எடுத்துக்கொண்டு அவற்றை முழுவதும் வீடியோ பதிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளையும் தொடரும் விசாரணை:பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, 'தன்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். நாளையும் (ஏப்.22) விசாரணை நடைபெற உள்ளதால், இது குறித்து நாளை விரிவாக பதிலளிப்பதாகவும்' தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம்: 'எது உண்மையோ அதனை திரையிட்டு மறைக்க முடியாது' - சசிகலா

ABOUT THE AUTHOR

...view details