தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போதைப்பொருளுக்கு எதிராக அனிமேஷன் மூலம் காவல் துறை விழிப்புணர்வு - டக்கர் பாண்டி

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக அனிமேஷன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை சிறப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

போதைப்பொருளுக்கு எதிராக அனிமேஷன் மூலம் காவல் துறை விழிப்புணர்வு
போதைப்பொருளுக்கு எதிராக அனிமேஷன் மூலம் காவல் துறை விழிப்புணர்வு

By

Published : Apr 3, 2022, 12:36 PM IST

சென்னை: DAD (Drive Against Drug) என்ற பெயரில் போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

மீம்ஸ்கள் முலம் விழிப்புணர்வு: போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை துண்டுப் பிரசுரங்களையும் காவல் துறை வழங்கி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது, நவீன காலத்திற்கு ஏற்ப போதைப்பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மீம்ஸ்கள் மூலம் காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

DAD என்ற பெயரில் சமூக வலைதளப்பக்கம் உருவாக்கி, அதில் மீம்ஸ்கள் மூலமாக போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டக்கர் பாண்டி, டிஜே தேவ் என்ற பெயரில் அனிமேஷன் கதாபாத்திரங்களை உருவாக்கி போதைப்பொருளுக்கு எதிரான அனிமேஷன் வீடியோக்களை போலீசார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு எதிராக அனிமேஷன் மூலம் காவல் துறை விழிப்புணர்வு

திரைப்பட வசனம் பேசும் கதாபாத்திரம்: குறிப்பாக, டக்கர் பாண்டி, நடிகர் ரஜினிகாந்த் சினிமா வசனங்களை பயன்படுத்தி போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செய்யும் அனிமேஷன் காட்சிகளை பொதுமக்கள் கவரும் வகையில் போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், டிஜே ரேவ் என்ற கதாபாத்திரம் நடிகர் அஜித்தின் நடித்த 'வலிமை' மற்றும் நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' இரண்டிலும் போதைப்பொருளுக்கு எதிராக படம் நடித்துள்ளதை சுட்டிக்காட்டி அனிமேஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை குறைக்கும் நடவடிக்கையில் தற்போது போலீசார் களமிறங்கியுள்ளனர். அதற்கு உதவும் வகையில் இதுபோன்று விழிப்புணர்வு வீடியோக்களை போலீசார் தொடர்ந்து வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை உறுதி

ABOUT THE AUTHOR

...view details