சென்னை:நாட்டின் ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) காலாண்டுக்கு காலாண்டு வீழ்ச்சி அடைந்துவருவதை மேற்கோள்காட்டும் தரவுகளுடன் சுட்டிக்காட்டும் பாஜக மூத்தத் தலைவரும், பொருளாதார வல்லுநருமான சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொருளாதாரம் ஆழ்ந்த வீழ்ச்சியில் இருக்கும்போது, பொது நிறுவனங்களை விற்பது என்பது மனநலக் கோளாறு, விரக்தியின் அறிகுறியையே காட்டுகிறது. இது ஒரு ஆரோக்கியமான கருத்தியல் தேவையாக இருக்க முடியாது.
நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 2016-லிருந்து காலாண்டுக்கு காலாண்டு வீழ்ச்சி அடைந்துவருகிறது என்ற தரவை மேற்கோள்காட்டும் சி.எஸ்.ஓ. அறிக்கையை மோடி அரசு மறுக்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.