சென்னையில் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை வைத்து சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஓட்டேரி பட்டாளம் பகுதியில் தாலி கட்டி இருப்பது தெரியவந்தது.
Video: 15 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் தாலி கட்டிய நிகழ்வு - பாய்ந்தது போக்சோ - boy married a 15 year old girl
சென்னையில் 15 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறுவனை தேடி வருகின்றனர்.
15வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் தாலி கட்டும் வீடியோ வைரல்
மேலும் ஓட்டேரியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்து, பட்டாளம் எல்லையம்மன் கோயிலில் வைத்து தாலி கட்டியதும் தெரியவந்தது. இது குறித்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் காருண்யா தேவி அளித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, தலைமறைவான சிறுவனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:"அக்னி பாத்" திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்!