சென்னை:இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக நிர்வாகிகள் இன்று (மே 19) தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது, தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைக் கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எழுதிய கடிதத்தை ஒப்படைத்தனர்.