சென்னை:PMK will face 2026 Tamilnadu election as solo:2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையிலான தனி அணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்திப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் சித்தானந்த சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் கோ.க.மணி, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.த.அருள்மொழி, பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் .
அதே போல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 5000 வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு
மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு பெற சட்டப்போராட்டம் நடத்த பாமக உறுதி ஏற்க வேண்டும், அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்