சென்னை: வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 26) அரசாணை வெளியிட்ட நிலையில், தலைமை செயலகத்தில் பாமக சட்டப்பேரவை குழுத் தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் எம்.பி ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
எந்தப் பாதிப்பும் இல்லை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி கூறுகையில், "வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஆணையிட்டுள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்.
சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி அவர்களால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் நிலுவையில் இருந்தது.
அதை ஏற்று தற்போது ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது. இது பாராட்டுக்குரியதாகும். இந்தச் சட்டத்தினால் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு ஒரே குத்தகையாக இருந்தது. தற்போது அது பிரிக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு
தொடர்ந்து ஆணையங்களின் பரிந்துரைகள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. காலம் தாழ்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. சமூகநீதி மத்திய அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லையென்றால் மாநில அரசு நடத்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடை நிலையில் இருக்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள 75 விழுக்காடு குடிசைப் பகுதியில் பின்தங்கிய மக்கள் உள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: '16 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு விண்ணப்பம்'