நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, "தமிழ்நாடு கடைக்கோடி மாநிலம் என்பதால், நீர் வளத்தை மேம்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
புதிய நீர்நிலைகளை உருவாக்கும் திட்டம், நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் உள்ளது வரவேற்கக்தக்கது என்றும் குறிப்பிட்டார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட துணிந்தால், தமிழக அரசு அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு, காவிரி-கோதாவரி இணைப்பால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தார்.