தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க பாமக கோரிக்கை! - வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க பாமக கோரிக்கை!

சென்னை: வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியிடம் பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

PMK demands 20% reservation for Vanniyar
PMK demands 20% reservation for Vanniyar

By

Published : Oct 12, 2020, 6:28 PM IST

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக நிர்வாகி பாலு, "சீர்மரபினருக்கான கணக்கெடுப்பை தனித்து நடத்த முடியாது. அவர்கள் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் வசிக்கவில்லை, மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழ்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே சீர்மரபினரை கண்டுபிடிக்க முடியும்.

சீர்மரபினர் கணக்கெடுப்புக்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது என்பதால், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். சீர்மரபினரை தனிப்பிரிவாக அறிவித்து அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details