தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குஷ்பூவின் கனவு கலைந்ததா..? சேப்பாக்கத்தில் பாமக போட்டி - Chennai

சென்னை: சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக அத்தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'குஷ்பூவின் கனவு கலைந்ததா..?', சேப்பாக்கத்தில் பாமக போட்டி, குஷ்பூ, சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, உதயநிதி ஸ்டாலின், PMK contesting in Chepauk, PMK contesting in Chepauk, Is Kushbhu disappointed with it?, Kushbhu, Chepauk Constituency, Chepauk, Triplicane, Chennai,  Chennai Latest
pmk-contesting-in-chepauk-is-disappointed-kushbhu

By

Published : Mar 11, 2021, 6:43 AM IST

அதிமுக அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக கட்சிகளுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சார்பில் குஷ்பூ இந்தத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். எனவே, இந்தத் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முஸ்லிம்கள் அதிகளவில் இருப்பதால், அவர்களின் வாக்குகள் முஸ்லீம் இனத்தை சேர்ந்த குஷ்பூக்கு கிடைக்கும் எனவும் கருதப்பட்டது. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பூவை சேப்பாக்கம் தொகுதியில் நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், கடந்த சில தினங்களாக குஷ்பூ தனது தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி, தொகுதி எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தப்படும்பட்சத்தில், சேப்பாக்கம் ஒரு 'நட்சத்திர' தொகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

திமுக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், பாஜக தேசிய கட்சி என்பதால் முதலில் மாநில தேர்தல் மைய குழுவின் சார்பில் ஒரு பட்டியல்தயார் செய்யப்பட்டு தேசியத் தலைமைக்கு அனுப்பப்படும். அதிலிருந்து தேசியத் தலைமை முடிவு செய்து பட்டியலை அறிவிக்கும். குஷ்பு சென்னை போன்ற மாநகராட்சி பகுதியில் நின்றால் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு சிரமமாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க:பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details